உள்நாட்டு செய்திகள்

தானியங்கி இயந்திரங்களின் ஊடாக பண மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பம்…



நாட்டின் சில பகுதிகளில் தானியங்கி(ATM) இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பண மோசடி குறித்து பொலிஸ் தடுப்பு விசாரணை திணைக்களம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தானியங்கி இயந்திரங்களின் ஊடாக பணம் மோசடி இடம்பெற்றமை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்களுக்கு அமைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும், குற்ற தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர் ஒருவர் உள்ளடங்கிய குழு ஒன்றினால் குறித்த மோசடி திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தானியங்கி இயந்திர நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.டி.வி கமராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான முறையில், சிலரது புகைப்படங்கள் பெறப்பட்டள்ளதாகவும், அதனை கொண்டு விசாரணைகளை நடத்தி வருவதாகவும், குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பட்டாசு தொழிற்சாலையில் தீ : ஒருவர் உயிரிழப்பு

wpengine

IMF உடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் எங்கே? – விமல் வீரவன்ச..!

wpengine

12 மாவட்டங்களுக்கு அதிகரிக்கும் வெப்பம்..!

wpengine