கேளிக்கை

தானா சேர்ந்த கூட்டத்தில் இணைந்த இளம் நடிகை…



விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இளம் நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் இளம் நடிகை மீரா மிதுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இவர் ஏற்கனவே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா தனது டப்பிங் பணிகளை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Related posts

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனது மனைவியும் மொடல் அழகியுமான Melaniya Trump.. (PHOTOS)

wpengine

2019 ஆம் ஆண்டின் உலக அழகி டோனி ஆன்சிங்

wpengine

முரளியின் கோரிக்கைக்கு விஜய் சேதுபதி அதிரடி பதில்

wpengine