ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கிய – உணவருந்தியவர்களது பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை



(FASTGOSSIP | COLOMBO) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட போது, தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அங்கு காலையுணவு சாப்பிட்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு, தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு கோரியுள்ளது.

குறித்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கடந்த 09ம் திகதி விசாரணைகள் இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போது தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்தார்.

தாஜ் சமுத்ரா விடுதியில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை ஏன் கைவிட்டனர் என்ற கேள்விக்கான விசாரணைகளை முன்னெடுக்க இந்தப் பட்டியல் உதவும் என்றும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக தகவல்

wpengine

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

wpengine

டட்யானா தாயானாள் – மஹிந்தவுக்கு மற்றுமொரு சிங்கக் குட்டி

wpengine