ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாஜூடீன் விபத்தில் இறக்கவில்லை படுகொலை



றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடினின் மரணம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வசிம் தாஜூடினின் மரணம் கொலை என, இரகசிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது அறிக்கை ஒன்றுக்கொண்டு முரண்பட்டதாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும் அவர் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. பற்கள் , முதுகு  உடைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடினின் சடலம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி மீட்கப்பட்ட து. அவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட போதிலும் அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது

 

Related posts

பொலன்னறுவையில் விவசாயிகள் இருவர் படுகொலை

wpengine

அமைச்சரின் அழைப்பின் பேரில் மஹிந்த – மைத்ரி சந்திப்பு.. (Photos)

wpengine

ஜனாதிபதி திடீரென பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு..

wpengine