உள்நாட்டு செய்திகள்

தாஜுதீன் கொலை – DIG அனுர மற்றும் சுமித் குமாரவிற்கு பிணை மறுப்பு



முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரது பிணை கோரிக்கைகள் கொழும்பு மேலதிக நீதவானால் மறுக்கப்பட்டுள்ளது.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, இவர்கள் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி எதிர்வரும் 7ம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து இன்று நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Related posts

அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில், முசலியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

wpengine

ஓய்வூதிய ஒழிப்புக்கு எதிராக அரச அதிகாரிகள் நடவடிக்கை..

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முறைப்பாடு…

wpengine