உள்நாட்டு செய்திகள்

தாஜுதீன் கொலை – முன்னாள் DIG அநுர மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.



முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க இன்று(10) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த இருவரையும் ஆகஸ்ட் 24 ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்ட காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வசீம் தாஜூடின் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

எனினும் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே தாஜூடின் கொலை செய்யப்பட்டார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவுக்கு எதிராக “ஜிஹாத்” என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பு இளைஞர்களுக்கு அழைப்பு

wpengine

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

wpengine

பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine