ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாஜுதீன் கொலை மட்டுமல்ல இன்னொரு கொலைக்கும் உறுதுணையாக அனுர – திடுக்கிடும் உண்மைகள்



முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற தமிழர் ஒருவரின் படுகொலைச் சம்பவத்துடனும் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம், அனுர சேனநாயக்க கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த காலப்பகுதியில் நடைபெற்றுள்ளது.

பம்பலப்பிட்டியில் வசித்த தமிழ்க் குடும்பமொன்றின் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பகைமை காரணமாக பாதாள உலகக் கும்பலின் துணையோடு ஒருவர் தனது சகோதரரைத் தீர்த்துக் கட்டியுள்ளார்.

இதற்கான பொலிஸ் பாதுகாப்பு மற்றும் அனுசரணை அனுர சேனநாயக்கவிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுர சேனநாயக்க பல்வேறு அழுத்தங்களையும் பிரயோகித்துள்ளார்.

இதுகுறித்து குற்றப் புலனாய்வு பிரிவில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அத்தியட்சகர் தாமாகவே முன்வந்து வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

யோகாசனம் செய்ய வேண்டும் என பயணி பிடிவாதம்; விமானம் திரும்பிச் சென்றது

wpengine

மன வேதனையில் சிவகார்த்திகேயன்!

wpengine

ஜூன் 01 – உலகளாவிய பெற்றோர் தினம்

wpengine