உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாஜுதீன் கொலை குறித்த CCTV காணொளிப்பதிவுகளை கண்டுபிடிக்க எடுத்த கனடா பரிசோதனை தோல்வியில்..


இலங்கையின் பிரபல றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலை தொடர்பில் சீ.சீ.ரீ.வி காட்சிகள் ஊடான விசாரணைகள் எதிர்பார்த்தளவு பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தாஜூடின் கொலை தொடர்பில் கனேடிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சீ.சீ.ரீ.வி காட்சிகள் தெளிவற்ற நிலையில் காணப்படுவதாக கனேடிய ஆய்வு கூடத்தின் தலைவர் டேவிட் மெக்கீ தெரிவித்துள்ளார்.

காட்சிகள் தெளிவற்று காணப்படுவதனால் திடமான முடிவுகள் எதனையும் வழங்க முடியாது என மெக்கீ, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி பத்து இறுவட்டுக்கள் அடங்கிய சீ.சீ.ரீ.வி காட்சிகள் தமக்கு கிடைக்கப் பெற்றதாகவும் இவற்றை பரீட்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இதில் எதிர்பார்க்கப்பட்டவாறு திடமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொவிட் 19 : சடலங்களை அடக்கம் செய்ய அதி விசேட வர்த்தமானி

wpengine

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விநடவடிக்கைகள் மீள் அறிவிக்கும் வரை ஒத்திவைப்பு..

wpengine

மக்களை ஏமாற்றிய NPP வேட்பாளர் கைது

News Editor