உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தாஜுடீன் கொலை செய்யப்பட்டுள்ளார் – இரகசிய பொலிஸாரினால் அம்பலம்



இலங்கை ரகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது அல்லவென்றும் அது கொலை எனவும் இரகசிய பொலிஸார் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போதே அவர்கள் இவ்வாறு கூறியதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த வழக்கில் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட வைத்தியர்களின் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் இது விபத்தல்ல கொலை என தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வழக்கு குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பணத்துக்காகவே விளையாடுகின்றனர்! நாடு என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை..!

wpengine

வட்வரி அதிகரிப்பு கல்வி, மருத்துவப் பொருட்களுக்கு விதிக்கப்படாது – ரவி

wpengine

அனுமதிப்பத்திரம் வழங்கும் காலம் நீடிப்பு

wpengine