உலக செய்திகள்

தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை…



சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர், சமூக வலைத்தளத்தில் தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கை அபுதாபி நீதிமன்றம் விசாரித்த போது. மன்சூர் தனது தவறான பதிவுகளின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கவுரவத்தையும், அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்தி விட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகமது மன்சூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மன்சூருக்கு 1 மில்லியன் திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

உக்ரைன் – அமெரிக்காவிடம் நசுங்கும் ரஷ்யா

wpengine

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை நியமிக்க கோரிய வழக்கில் பரபரப்பு.

wpengine

அமெரிக்காவில் ‘ஒபாமா கேயார்’ திட்டத்தை இரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம்..

wpengine