உள்நாட்டு செய்திகள்

தவணை பரீட்சை பெறுபேறுகளை விடுமுறைக்கு முன்னர் வழங்க வலியுறுத்தல்…


தவணை பரீட்சைகள் நடத்தப்பட்ட பின்னர் அதன் பெறுபேறுகளை பாடசாலைகளின் தவணை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எட்டியாராச்சி அனைத்து அதிபர்களுக்கும் மாகாண கல்வி செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

தவணை பரீட்சை முடிவடைந்த பின்னர் அதன் பெறுபேறுகளை பாடசாலை விடுமுறைக்கு பின்னர் வழங்குதல் , தாமதம் ஏற்படுவதினால் மாணவர்களின் கல்வியாற்றலையும் முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்வதற்கு பெற்றோர்களால் முடியாதுள்ளது.

இந்நிலையில், மாணவர்களின் முன்னேற்ற அறிக்கை போன்று மாணவர்களின் ஆற்றல் தொடர்பான அறிக்கை முதலானவை அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலை தவணை முடிவடையும் தினத்தில் இருந்து ஒரு மாத காலத்திற்கு முன்னதாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் பங்களாதேஷ் அதிரடி – தலை குனிந்தது இலங்கை அணி..

wpengine

06 மாவட்டங்களில் இன்றும் வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில்..

wpengine

தபால் கட்டணம் அதிகரிப்பு…

wpengine