உள்நாட்டு செய்திகள்

தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு…


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்.கிளாயர் பகுதியில் இன்று(15) காலை இடம்பற்ற பாரிய மண்சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இப்பிரதான வீதியினூடாக சிறிய வாகனங்கள் மாத்திரமே ஒருவழியாக பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகளில் தலவாக்கலை பொலிசார் ஈடுபட்டதுடன், ஹட்டன் – நுவரெலியா ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உடுவே தம்மாலோக தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்…!

News Editor

நிதி அமைச்சின் செயலாளராக எஸ்.ஆர். ஆட்டிகல நியமனம்

wpengine