உள்நாட்டு செய்திகள்

தலதாவின் பிரபல ஆதரவாளர் வெட்டிக்கொலை – தேர்தல் நரபலியின் தொடக்கம்?



அமைச்சர் தலதா அத்துகோரளவின் முதன்மை ஆதரவாளரான துஷார தேவாலேகம என்பவர் இனந்தெரியாத சிலரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, நொரகல்லேவத்த பிரதேசத்தில் இக்கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தலதா அத்துகோரளவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த நபரே இவ்வாறு இனந்தெரியாதோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, 37 வயது நிரம்பிய துஷார தேவாலேகம என்பரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொது தேர்தலையொட்டிய முதல் வன்முறை ஆரம்பமாகியுள்ளதாக கபே அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு பிரதேசங்கள் பலவற்றுக்கு மின் தடை…

wpengine

பிள்ளையானின் அலுவலகத்தில் கைக்குண்டுகள் மீட்பு

wpengine

தடையின்றிய மின்சார விநியோகம்

wpengine