உள்நாட்டு செய்திகள்

தற்காலிகமாக இடமாற்றம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களை மீள தமது நிரந்தர பணி இடங்களில் கடமையாற்ற அறிவுறுத்தல்



(FASTNEWS | COLOMBO) – மே மாதம் 06ம் திகதியிலிருந்து தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கடமையாற்றி தற்காலிகமாக இடமாற்றம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்கள் அனைவரும் மீள தமது நிரந்தர பணி இடங்களில் கடமையாற்ற வேண்டும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரினால் அறிவிப்பொன்று விடுக்கப்பட்டு சகல பாடசாலை அதிபர்களுக்கும் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்; கடந்த ஆறாம் திகதியிலிருந்து எம்மால் வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன. இடமாற்றம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக தமது நிரந்தர சேவை நிலையங்களில் கடமையாற்ற வேண்டும். ஆசிரியர்கள் சமூகமளிக்க தவறும் ஒவ்வொரு தினமும் சம்பளமற்ற விடுமுறையாக கணிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்முறை விசேட தினம் அறிவிக்கப்பட மாட்டா…

wpengine

ஹம்பாந்தோட்டை , குருபொகுண பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை..

wpengine

சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை அமர்வில் பங்கேற்பு

wpengine