உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை இன்று…


தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சை இன்று (05) இடம்பெறவுள்ளது.

மூவாயிரத்து 50 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றுகின்றார்கள்.

பரீட்சை நிறைவடைந்த பின்னர் புலமைப்பரிசில் வினாப்பத்திரம் இரகசிய ஆவணம் என்பதனால் இந்த வினாப்பத்திரத்தை வைத்திருந்தல், பிரதி பண்ணுதல், பிரதி பண்ணப்பட்ட பிரதியை வைத்திருத்தல், விற்பனை செய்தல், அச்சிடுதல், பத்திரிகைகளில் வெளியிடுதல், வார சஞ்சிகைகளில் வெளியிடுதல் ஆகிய தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

சமூக இணையத்தளத்தில் அல்லது வேறெந்த வகையிலும் இதனை பகிரங்கப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் அது தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்திற்கு அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்காக பரீட்சைகள் திணைக்களத்துடன் 1901 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டது முஸ்லிம்களால் அல்ல – இலங்கைச் சூழலியலாளர்…

wpengine

சிறைச்சாலை பயிற்சிப் பள்ளிகளின் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

wpengine

மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine