உள்நாட்டு செய்திகள்

தரம் 5 பரீட்சையின் சட்ட திட்டங்களை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை



தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் சட்ட திட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று (16’) நள்ளிரவு முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை  தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், மற்றும் அவற்றை விநியோகித்தல்,  உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கு அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துடனோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்

Related posts

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை…

wpengine

எனது சம்பளத்தை வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் -சஜித்

wpengine

பிரபல நடிகர் ஜே.எச்.ஜயவர்த்தன காலமானார்

wpengine