Top Story 1உள்நாட்டு செய்திகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய இன்று(11) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

2,936 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதுடன், இம்முறை 331,694 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட திட்டத்தின் கீழ் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

wpengine

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…

wpengine

ரஷ்யாவின் உரம் தரமானது

Azeem Kilabdeen