உள்நாட்டு செய்திகள்

தமிழ் மக்களிடம் சம்பந்தன் கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல், நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும். அதனை நாங்கள் பெறுவதாக இருந்தால், அதனை நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால். எமது நியாயமான நிலைப்பாட்டை உணர்ந்திருக்கும் சர்வதேச சமூகம் எங்களுடன் இருக்கின்ற போது இவற்றை நிறைவேற்றுவதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவது அதற்கு பாதகமாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதனால், இதனை அனைவரும் உணர்ந்து தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்வும் கூட்டமைப்பின் தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்றம் நாளை(16) மீண்டும் கூட்டப்படும்… (Update)

wpengine

தடம்புரண்ட புகையிரதத்தின் சீர்திருத்தப் பணிகள் தொடர்கின்றது

wpengine

எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்கெடுப்பு

wpengine