உள்நாட்டு செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்..



மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் 20ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகம் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அலுவலகத்தை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தோல்வி பயத்தில் இருப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்தார்.

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)

Related posts

எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன – ரவி

wpengine

வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் கம்மன்பில..

wpengine

ஜனாதிபதியின் புதிய நியமனங்கள்

News Editor