உள்நாட்டு செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எட்ட மு.ப10.00 மணிக்கு கூடுகிறது…



நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா, இன்றேல் வாக்களிக்காது நடுநிலை பேணுவதா என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தினை எடுக்க தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(04) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிக்க நேற்று(03) தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய போதிலும், இறுதியில் தீர்மானம் எட்டப்படாத நிலையில் நிறைவுற்றிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையே நேற்று(03) மதியம் சந்திப்பொன்று இடம்பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்…

wpengine

டீசல் – மசகு எண்ணெய் இறக்குமதிக்கு ஒப்புதல்

wpengine

தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு…

wpengine