கேளிக்கை

தமிழ் சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டார் ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில்..



youtubeஇல் 1½ கோடி பேர் ரசித்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு நடனம் ஆடிய கல்லூரி ஆசிரியை தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

கேரள கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட இளைஞர் பட்டாளம் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணப்பண்டிகையின் போது பாடி மகிழ்ந்தனர். இதற்காக அவர்களே நடன அசைவுகளையும் செய்து கொண்டனர்.

அப்படி நடந்த ஒரு நடன காட்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூ டியூப்பில் வெளியானது. அன்று முதல் இன்று வரை சுமார் 1½ கோடிக்கும் அதிகமானோர் இப்பாடலையும், இதற்காக ஆடப்பட்ட நடன காட்சியையும் பார்த்தும், கேட்டும் பரவசம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரு கல்லூரி ஆசிரியைகளும், மாணவிகளும் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.

அவரது பெயர் ஷெரில். இவரும் அன்ன ஜார்ஜ் என்ற இன்னொரு ஆசிரியையும் இணைந்து சக மாணவிகளுடன் சேர்ந்து இந்த நடனத்தை ஆடியிருப்பார்கள்.

இதில் ஆசிரியை ஷெரிலின் ஆட்டம்தான் அபாரம். பாட்டின் ராகத்திற்கு ஏற்ப கைகளையும், கால்களையும் அசைத்து ஆடியவிதமும் அனைவரையும் கவர்ந்தது. இதுதான் இப்பாடலை கோடிக்கணக்கானவர்கள் பார்த்த காரணம் என்பதும் தெரியவந்தது.

இதன்மூலம் ஒரே நாளில் இந்த நடனத்தை ஆடிய ஆசிரியை ஷெரில் புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார். கேரளம் மட்டுமின்றி தென்மாநிலம் முழுவதும் அவருக்கு ரசிகர் பட்டாளமும் உருவாகிவிட்டது.அவரை சினிமாவில் நடிக்க வைக்க பல முக்கிய இயக்குனர்கள் திட்டமிட்டனர்.

தமிழ் பட டைரக்டர் ஒருவரும் ஆசிரியை ஷெரிலை தொடர்பு கொண்டு, அவரது அடுத்த படத்தில் நடிக்க விருப்பமா? என்றும் கேட்டுள்ளார்.ஆனால் ஆசிரியை ஷெரில் இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

இதற்கிடையே இப்பாடல் மூலம் பிரபலமான கல்லூரி நிர்வாகம் இதன்மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை மக்களின் நலத்திட்ட பணிகளுக்கு செலவிட உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

Related posts

ஓஷதியின் தேவதையினது முதல் Pre Shoot [PHOTOS]

wpengine

நயனுக்கு HBD

wpengine

பிரபல நடிகை மற்றும் மனைவிக்கு கொரோனா

wpengine