உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் திங்கள் விடுதலை – ஆர்.சம்பந்தன்



சிறையில் தமிழ் அரசியல் கைதிகளாக இருக்கும் கைதிகளில் 32 பேர், எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான ஆர்.சம்பந்தன் குறித்த செய்தியினை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர் அதிகரிகளுடனான நேற்று(5) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இனக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காடியுள்ளார்.

இன்னும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினரையும் சந்தித்து பேசியதாகவும், இதனிடையே, நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு விடுதலை செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் விசேட பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டார்.

நேற்று கூடிய சபை அமர்வின் போது இந்த பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Related posts

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது

Azeem Kilabdeen

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய இலட்சினை…

wpengine

மீனவர்களுக்கு அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை…

wpengine