ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்க’வை இலங்கைக்கு திருப்பி அழைக்க 2 வார காலக்கேடு..



இலண்டனில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, 02 வார காலத்துக்குள் இலங்கைக்கு திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசினை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி குறித்த இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இலண்டன் பெருநகர காவல்துறையிடமும், பிரித்தானிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவிடம் இலண்டன் பெருநகர காவல்துறை விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அவருக்குள்ள இராஜதந்திர விலக்குரிமை தடையாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிகேடியர் பிரியங்கவிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, அவருக்கு பிரித்தானிய அளித்துள்ள இராஜதந்திர விலக்குரிமையை நீக்க வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று(06) அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின் வீடியோ..

 

#rishma

Related posts

கோட்டா வெற்றிக்கு டிலான் வேட்டியுடன் நள்ளிரவில் நீரில் பூஜை (PHOTOS)

wpengine

ஜோன்ஸ்டன், லக்ஷ்மன்,அருந்திக – இலங்கைக்கு எதனோல் கொண்டு வரும் எஜண்டுக்கள்..

wpengine

கழிவறை கட்டாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

wpengine