ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தமிழர்களுக்காக நாம் குரல் கொடுப்போம் : ஞானசார திடீர் திருப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதற்காக எத்தனை வருடங்கள் பேச்சுகள் தொடர்ந்தும் பலனில்லை. இதனால் சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுவதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

“.. அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர். சாதாரண தமிழ் மக்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காண வேண்டும். இதற்காக நாமும் குரல் எழுப்புவோம்.

அன்று முதல் இன்று வரை தேர்தல் காலங்களில் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றிக் கதைக்கப்படுவது வழமையாகிவிட்டது. இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்மொழிகின்றோம்.

இந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துள்ளனர். ஆனாலும், அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டு வந்தனர். எனவே, இந்த நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும்.

அதேவேளை, 13, 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல. தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து, இதோ, இந்தத் தீர்வை தான் தம்மால் வழங்க முடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும்…” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச ஊழியர்கள் இலஞ்சம் பெற்றால் ஏழு வருட சிறை

wpengine

பிரபா சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம் – கோத்தாபய

wpengine

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! ஓபிஎஸ்ஸின் பதவி தப்பியது

wpengine