உள்நாட்டு செய்திகள்

தபால் மூலம் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்களிடமிருந்து கட்டணம் அறிவிட நடவடிக்கை…



தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று (02) மட்டும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும், அவ்வாறு வாக்களிக்காமல் இருந்த சகலரிடமிருந்தும் காரணம் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஒரு தபால் மூல வாக்குக்காக சுமார் 750.00 ரூபா செலவிடுவதாகவும், தபால் மூலம் வாக்களிக்கத் தவறுவது அரச செலவைத் துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்காளர்கள் சமூகமளிக்காததன் காரணமாக அவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், வாக்களிக்கத் தவறியவர்களிடம் காரணங்களை வினவியதன் பின்னர், அவர்கள் நியாயமான காரணங்களைச் சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை அவரிடமிருந்து அறவிடப்படும் எனவும் ஆணைக்குழு தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

#rishma

Related posts

நிலவும் அரசியல் நெருக்கடிக்கு 07 நாட்களுள் தீர்வு – ஜனாதிபதி…

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வெளியேற்றம்

wpengine

நீர்கொழும்பு சம்பவம் – சேதங்கள் தொடர்பில் மதிப்பிட்டு நட்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை…

wpengine