உள்நாட்டு செய்திகள்

தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக, மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறமாட்டாது என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனை தவிர, மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கான தபால் விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதங்கள் நாட்டின் ஏனைய தபாலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

கொழும்பின் பல பகுதிகளில் இன்றும் நீர் வெட்டு

wpengine

கண்ணீர்புகைப் பிரயோகம் அறிக்கையளிக்க விசேட குழு நியமனம்.

wpengine

இளஞ்சிவப்பு பந்துடன் முதல் முதலாக மோதுகிறது.. திமுத்,குசல் மற்றும் திரிமன்னவுக்கு வரம்.. (அணி விவரம்)

wpengine