உள்நாட்டு செய்திகள்

தபால் சேவை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது…



பணிப்புறக்கணிப்பில் உள்ள தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

தபால் சேவை சங்கத்தினரின் பிரதிநிதிகளோடு கடந்த முதலாம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், தபால் அமைச்சோ, தபால் திணைக்களமோ தனித்து குறித்த இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து, அமைச்சர் சரத் அமுனுகமவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதோடு, அமைச்சரவை ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு தொழிற்சங்க போராட்டம் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

பந்துவீச்சாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை… வீரர்களின் நடவடிக்கை குறித்து மேத்யூஸ் ஆதங்கம்..

wpengine

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழு நியமித்து விசாரணை மேற்கொள்ளப்படும்…

wpengine

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று(04)…

wpengine