உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தன்னிச்சையாக பொலிஸாரிடம் சரணடைந்த இரு போராட்டக்காரர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அரசாங்கத்துக்கு எதிரான முன்னணி போராட்டக்காரர்கள் இரண்டு பேர் தாமாக முன்வந்து இன்று(22) பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெட்டா என்ற பெயரில் பிரபலமான ரதிந்து சேனாரத்ன மற்றும் லஹிரு வீரசேகர ஆகிய இரண்டு போராட்டக்காரர்களுமே இவ்வாறு மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் முன்னணி செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 09 மற்றும் 10ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இருவரும் இன்னும் சிலரும் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினம் இவர்கள் இருவரும் மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை

wpengine

அளுத்கம பிரதேசத்தினை மீளக்கட்டியெழுப்பிய முப்படையினர், அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு

wpengine

கடுகண்ணாவ மண்சரிவில் காணாமல் போன அறுவரில் இருவர் சடலமாக மீட்பு(Update)

wpengine