உள்நாட்டு செய்திகள்

தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரியும் சத்திரசிகிச்சை மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு


தனியார் வைத்தியசாலையில், நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் உடனடியாக மருத்துவர்கள் வெளியேற முடியாது என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், நோயாளிகள் அருகாமையில் மருத்துவர் குறைந்தபட்சம் ஒரு மணித்தியாலங்கள் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான உத்தரவு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சத்திரசிகிச்சையின் போது நோயாளிகள் எதிர்நோக்கக்கூடிய ஏனைய பாதிப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவினை மீறிச் செயற்படும் வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனியார் வைத்திய சனலிங் சேவைகளை நடத்தும் மருத்துவர்கள் ஒரு
நோயாளிக்கு குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

களுத்துறையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ் குடைசாய்ந்ததில் சுமார் 19 பேர் படுகாயம்

wpengine

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

wpengine

கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி? நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை!

wpengine