உள்நாட்டு செய்திகள்

தனியார் மயமாகும் இ.போ. சபையின் பாதுகாப்புப் பணிகள்?


அகில இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாதுகாப்புப் பணிகள் தனியார் துறைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாகத் குற்றம் சுமத்தியுள்ளது .
பாதுகாப்புத் துறையில் வெற்றிடங்கள் நிலவி வரும் நிலையில் அரசாங்கம் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்காது அதற்குப்பதிலாக நிதி அமைச்சின் தேவைக்கு அமைய தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாகத் தொழிற்சங்கதால் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் துறையினரிடம் பாதுகாப்பு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவது இலங்கை போக்குவரத்துச் சபையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம்  எனவும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு பணிகள் தனியார் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது எனக் கோரி ஜனாதிபதியிடம் கடிதமொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை!

wpengine

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

wpengine

மழையுடனான காலநிலை தொடரும்…

wpengine