உள்நாட்டு செய்திகள்

தனியார் பெற்றோல் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக எரிபொருள் தாங்கிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு தனியார் பெற்றோல் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வாவினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் தாங்கி உரிமையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காவிட்டால், பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக தாங்கிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 705

wpengine

சாதாரண தரப்பரீட்சையின் செய்முறை பரீட்சை எதிர்வரும் 20 இல் ஆரம்பம்…

wpengine