உள்நாட்டு செய்திகள்

தனியார் பஸ்களிலும் தண்டப்பண முறைமை அமுலுக்கு..



தனியார் பஸ்களில் தூர இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ளும் பிரயாணிகளுக்கும் புதிய தண்டப் பணமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, பயணச் சீட்டு இல்லாத பயணிகளிடம் 1000 ரூபா தண்டப் பணமும்,பிரயாணச் சீட்டுத் தொகையை இரு மடங்காகவும் அறவிடப்படவுள்ளது.

இது தொடர்பான சட்டம் ஆணைக்குழுவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுத்தலைவர் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை,அண்மையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கான தண்டப் பணம் 1000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இருப்பினும்,தனியார் பஸ்களில் இந்த சட்டம் இருக்கவில்லை ஆனால் தற்பொழுது தனியார் பஸ்களுக்கும் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே பஸ்களில் பயணிக்கும் பொது மக்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறுதேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

வடமாகாண தீவக மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கிய இந்தியா

wpengine

எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு…

wpengine

PHI பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்

wpengine