Top Story 2உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்த சில பகுதிகள் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் நாளை(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எஹலிகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மின்னான, போபத் எல்ல, விலேகொட, அஸ்கங்குல மற்றும் யகுதாகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாணந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 675 கொடவத்த கிராம சேவகர் பிரிவு மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மக்கொன கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேகவர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதமர் தலைமையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

wpengine

நாட்டின் பல பாகங்களிலும் இன்று(27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்பிக்கை!

wpengine