உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தண்டப்பணம் குறித்த முடிவு குறித்து தீர்க்கமான கலந்துரையாடல் இன்று..


தனியார் பஸ் ஊழியர்களின் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு மற்றும் பஸ் சங்க உறுப்பினர்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று(05) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சாரதிகளால் இளைக்கபப்டும் சில தவறுகளுக்கான அபராதத் தொகையை 25,000 ரூபாவாக உயர்த்தியமை தொடர்பில், அதிருப்தி வௌியிட்ட தனியார் பஸ் ஊழியர்கள் கடந்த 3ம் திகதி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி தலையீட்டினால் அந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

அத்துடன், பஸ் சங்கங்களுடன் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், அவர்களது பிரச்சினை பற்றி ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள், வாகனப் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரி, மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளரால் நியமிக்கப்பட்ட ஒருவர் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இதன்படி இந்தக் குழுவுக்கும் பஸ் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Related posts

சுமார் 77 இலட்சம் ரூபாய் கொள்ளை சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள் கைது..

wpengine

ஞானசார தேரர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படுவாரா..? முஸ்லிம் தரப்பு சம்மதிக்குமா..??

wpengine

இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா

wpengine