ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தகாத உறவால் கருவுற்ற பெண், இழப்பீடு கோரும் அவலம்!


கணவருடனான தொடர்பை நிறுத்த வேண்டுமாயின் சட்டரீதியான மனைவியிடம் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என பெண்ணொருவர் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளம் பெண்ணொருவர் ஒரு பிள்ளைக்கு தந்தையான ஒருவருடன் கள்ளத் தொடர்பை பேணியுள்ளதுடன் இருவரும் தனியாக வாழ போவதாக கூறி ஊரை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் ஆண் நபரின் சட்டரீதியான மனைவி ஆகியோர் இது சம்பந்தமாக நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சட்டரீதியான மனைவியின் கணவர் மூலம் தனது வயிற்றில் கரு உருவாகியுள்ளதாகவும் சட்டரீதியான மனைவி இழப்பீடு வழங்கினால், பிரிந்து செல்ல விரும்புவதாகவும் பெண் கூறியுள்ளார்.

இறுதியில் ஒரு பிள்ளையின் தந்தை தனது சட்டரீதியான மனைவியுடன் செல்வதாக கூறி, பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

தளபதி நடிகரின் படத்தை ஹிட்டாக்க தில்லாலங்கடி வேலை பார்த்த வாரிசு நடிகையின் தந்தை?

wpengine

ஆர். சம்பந்தனை நலம் விசாரிக்க சென்ற தந்தையும் மகனும்..

wpengine

சந்திரிக்காவுக்கு வெட்டிய குழியில் தானே விழுந்த மகிந்த!!!

wpengine