உள்நாட்டு செய்திகள்வணிகம்

தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர்கள் மீள் நியமனம்…



தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும், பதினைந்து வருட கால வரலாறு கண்ட தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர்கள் மீள் நியமிக்கப்பட்டனர்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையயத்தின் முன்னால் பணிப்பாளர் நாயகமாகக் கடைமை புரிந்த பேராசிரியர். ரொஹான் சமரஜீவ, ICTA யின் தலைவராகப் பதவி ஏற்றுள்ளார்.

புதிய சபை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பத்தின் பிரதான பயன்களான கணினி மென்பொருள், வணிகச் செயல் அயலாக்கம் (BPO), தொலைத் தொடர்பாடல், இணையப் பாதுகாப்பு மற்றும் அரசாங்கச் செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை பிரதிநிதிப்படுத்தியுள்ளது.

இதன் முக்கிய நோக்கம், ICTA இன் உந்து வேகத்தை மீளக்கட்டியெழுப்பி அரசாங்க, தனியார் மற்றும் பொதுஜன சமூகங்களுடன் ICTA யின் முக்கிய பங்காகிய டிஜிட்டல் முயற்சிகளை முன்னெடுப்பதாகும். இதன் மூலம் அரசாங்கத்தின் திறனாக்கம், மாறும் பொருளாதாரம் மற்றும் முழுமையான சமுகம் ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்வதாகும்.

Related posts

லண்டனில் இருந்த 207 மாணவர்கள் நாடு திரும்பினர்

wpengine

“இலங்கையில் காணப்படும் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”

wpengine

மின்விநியோகத் தடை – அறிக்கை கோரல்

wpengine