உள்நாட்டு செய்திகள்

தகவலறியும் உரிமைச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி விரைவில்…



தகவலறியும் உரிமைச் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரி 03ம் திகதி வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின் ஒவ்வொரு பிரஜைக்கும் தமக்கு தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு தகவல்களை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்களினதும் அதிகாரிகளையும் ஒரிடத்திற்கு அழைத்து நியமனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் இச்செயற்பாடு ஆரம்பமாகும் என்று அமைச்சர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த இந்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related posts

பட்டதாரி வெற்றிடங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு

wpengine

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

ஞானசாரவுக்கு எதிராக, ACMC கட்சி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

wpengine