உள்நாட்டு செய்திகள்

ட்ரிபிள் கேம் ஆடி நல்லாட்சி அரசில் இணையும் சுசில் – விமல்



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் டபிள் கேம் ஆடினாரா அல்லது ட்ரிபிள் கேம் ஆடினாரா என்பதை தான் அறியவில்லை எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வருவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறும் எனக் கூறினார்கள், ஆனால் மைத்திரி, முன்னணியை தோல்வியடைய செய்தார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேன, ஒழுக்கப் பிரச்சினையை மையப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணிய வைக்க முயற்சித்து வருகிறார்.

மனச்சாட்சிபடி செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒழுக்கப் பிரச்சினையை பயன்படுத்தி தடுக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.

(riz)

Related posts

களனிப் பல்கலைக்கழக மாணவருக்கும் கொரோனா

wpengine

நிலக்கரி கொள்வனவு மற்றும் அரிசி இறக்குமதி மாபியா தொடர்பில் கோப் குழு விசாரணை..

wpengine

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது

wpengine