உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ட்ரம்ப் இனது அரசியலில் இலங்கைக்கு கிடைக்கும் வரம்..


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளமையானது, போர்க்குற்ற விசாரணை விடயத்தில் இலங்கைக்கு வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.

இந்திய ஊடகம் ஒன்று மேற்குறித்த செய்தியினை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் முக்கிய பங்காளியாக இருந்தார்.

எனினும் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் உள்நாட்டு விவகாரங்களிலேயே அதிக அவதானம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீதான அமெரிக்கத் தலையீடு குறையும் என்ற கருத்து நிலவுகிறது.

எனவே இது இலங்கைக்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

இரா.சாணக்கியன் (எம்பி) பசுத்தோல் போர்த்திய புலி : அவலநிலையை எதிர்கொள்ளும் மட்டு.மாவட்ட முஸ்லிம்கள்..!

wpengine

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் – அமெரிக்க செனெட் குழு வேண்டுகோள்..!

wpengine