உலக செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப், FBI’யின் பிரதானி ஜேம்ஸ் கோமி இடையில் சந்திப்பு..



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், FBI’யின் பிரதானி ஜேம்ஸ் கோமியைச் சந்தித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் FBI மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டன் FBI மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.

தமது தோல்விக்கு FBI’யே காரணம் எனவும் ஹிலரி குறிப்பிட்டிருந்தார்.

ஹிலரி கிளின்டனின் மின்னஞ்சல் தொடர்பில் FBI கடந்த தினங்களில் அதிகளவான செய்திகளை வெளியிட்டிருந்தது.

இதுவே தமது தோல்விக்கு முழுக்காரணம் என ஹிலரி குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வடகொரியாவின் பொறுமையை சோதித்தால் சீனா கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும்..

wpengine

ஹாங்காங் தேர்தல் – ஜனநாயக ஆதரவு இயக்கம் முன்னிலை

wpengine

ஈரானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து…

wpengine