உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு



(FASTNEWS | COLOMBO) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் அமெரிக்க கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ள நிலையில், குறித்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 51% ஆனோர் டிரம்ப் தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர், வலுவான தலைவர் என கூறி உள்ளனர். அதே நேரத்தில் பெரும்பாலானோர் அவரது நேர்மை, நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர்.

34% அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர், நம்பகத்தன்மை கொண்டவர் என கூறி இருக்கின்ற நிலையில், கருத்துக்கணிப்பில் பங்கேற்ற குடியரசு கட்சியினரில் 75% ஆனோர் டிரம்ப் நேர்மையானவர் என கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் 06% பேர் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர் என கூறி இருக்கிறார்கள்.

Related posts

மூளைக்காய்ச்சல் நோய்க்கு ஆப்ரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிப்பு

wpengine

ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 133 பேர் உயிரிழப்பு…

wpengine

அகதிகளை குறிவைத்து ஜேர்மனிய அதிபரின் அரசியலால் சிக்கல்..

wpengine