விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தானுக்கு 2வது இடம்



இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வசப்படுத்தியதன் மூலம் பாகிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா தலா 106 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் நூலிழை வித்தியாசத்தில் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்கிறது. சார்ஜா டெஸ்டில் ‘சரண்’ அடைந்த இங்கிலாந்து 3 புள்ளிகளை இழந்ததுடன் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. இதனால் இந்திய அணி தானாகவே ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தை பெற்றுள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 அல்லது 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால், தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை வருமாறு:-

1.தென்ஆப்பிரிக்கா (125 புள்ளி)

2. பாகிஸ்தான் (106 புள்ளி)

3. ஆஸ்திரேலியா (106 புள்ளி)

4. இந்தியா (100 புள்ளி)

5. நியூசிலாந்து (99 புள்ளி)

6. இங்கிலாந்து (99 புள்ளி)

7. இலங்கை (93 புள்ளி)

8. வெஸ்ட் இண்டீஸ் (76 புள்ளி)

9. வங்காளதேசம் (47 புள்ளி)

10. ஜிம்பாப்வே (5 புள்ளி)

Related posts

கோஹ்லியின் சாதனையை தகர்த்த பாபர் அசாம்

wpengine

கரீபியன் பிரீமியர் லீக் இற்காக சங்கா மற்றும் மாலிங்க கைச்சாத்து…

wpengine

IPL போட்டிகள் செப்டம்பரில் ஆரம்பம்

wpengine