வாழ்க்கை

டென்ஷனால் அழகு பறிபோகலாம்….



மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இல்லாமல் வைத்துக்கொண்டால், முகமும் அழகாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சிலரைப் பார்த்தால் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் மாதிரி எப்போதும் புத்துணர்ச்சியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எப்போதும் தூங்கி வழியும் முகத்தோடு இருப்பார்கள். சுறுசுறுப்பு அவர்களிடம் இருந்துவிடுபட்டு போயிருக்கும். அதனால், அவர்களது அழகும் காணாமல் போய் இருக்கும்.

இது தொடர்பாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதாவது, இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும் என்கிற கோணத்தில் அந்த ஆய்வு அமைந்திருந்தது.

ஆய்வின் முடிவில், அடிக்கடி டென்ஷனாகும் நபர்களை விடவும், டென்ஷன் ஆகாமல் எதையும் ‘டேக் இட் ஈஸி‘யாக எடுத்துக்கொள்பவர்கள் ப்ரெஷ் ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி ஆய்வாளர்கள் கூறும்போது, அழகுக்கும், மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால், முகமும் அழகாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

நீங்களும் டென்ஷன் பார்ட்டி என்றால், இப்போதே டென்ஷனை தூக்கி எறிந்துவிடுங்கள். இல்லையென்றால், அழகு உங்களிடம் இருந்து ‘எஸ்கேப்‘ ஆகிவிடும்.

Related posts

சுட்டெரிக்கும் வெயிலில் ஏற்படும் சரும கருமையை போக்க இப்படி ட்ரை பண்ணுங்க…

wpengine

பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளுக்கு பீட்ரூட் மினி பூரி…

wpengine

கைகள் மற்றும் கால்களின் அழகை மேம்படுத்த இதை யூஸ் பண்ணுங்க!

wpengine