உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் மொத்தமாக 24 ஆயிரத்து 942 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

எனினும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23 ஆயிரத்து 118 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

ஷிரந்தி, யோஷித்தவை வழிக்கு கொண்டு வர   நீதிமன்ற உத்தரவு……………

wpengine

7 மாகாணங்களுக்கு தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை..

wpengine

பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்ட மருத்துவருக்கு இடமாற்றம்!

wpengine