உள்நாட்டு செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு…



நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவும் அபாயமுள்ளதாக அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

புத்தளம், பேராதனை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 7 கிராம சேவகர் பிரிவுகளில் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பேராதனை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலையின் போது, தமது சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

கொ​ரோனா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன

wpengine

தில்ருக்‌ஷியின் தொலைபேசி உரையாடல்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

wpengine

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இன்று ரமழான் பண்டிகை…

wpengine