உள்நாட்டு செய்திகள்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகள்…



இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு பல புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் சுமார் 184,000 பேர் பாதிக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். மேலும், டெங்கு காய்ச்சல் பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் ஊடாகவே டெங்கு காய்ச்சலை முற்றாக ஒழிக்க முடியும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.

Related posts

குவைத்தில் வீட்டு பணியாளர்களாக பணியாற்றுவோருக்கு காப்புறதி

wpengine

மாணவர்களை தாக்கியமைக்கு அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியம் மனித உரிமை ஆணைக்குழுவில்..

wpengine

வடமாகாண முதலமைச்சர் சி.வி. உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ்

wpengine