உலக செய்திகள்

டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழப்பு…



அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நேற்று(05) காலை ஏராளமானோர் கூடியிருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பலரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

மன்மோகன் சிங் மறைவு – முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

Azeem Kilabdeen

அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தையை இரத்து செய்தது தலீபான்கள்…

wpengine

இம்முறை ஹஜ் வழிபாடுகளுக்கு 1000 யாத்திரிகர்கள்

wpengine