Top Story 3உள்நாட்டு செய்திகள்

டுபாயில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு குரங்கம்மை தொற்று!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் இருந்து நாடு திரும்பிய தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தொற்றுநோயை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2022 நவம்பரில் இலங்கை தமது முதல் இரண்டு குரங்கம்மை நோயாளர்களை உறுதிப்படுத்தியது.

Related posts

இன மத பேதத்தினை துறந்து FEED THE FAMILY – 2015 RAMADAN (VIDEO)

wpengine

யோஷித தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை! இரகசிய ஆவணங்கள் அம்பலம்

wpengine

வஸீம் கொலை – தொலைபேசி அழைப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக CID அறிவிப்பு..

wpengine