விளையாட்டு

டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவே வெல்லும் – சச்சின்



இந்திய அணி சமபலத்துடன் இருப்பதால் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவே வெல்லும் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

6வது டி 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 8ம் திகதி இந்தியாவில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் டி20 கிண்ணத்தை இந்தியாவே கைப்பற்றும் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய அணியில் மூத்த வீரர்களுடன் புதிதாக இளம் வீரர்களும் இருப்பதால் சம பலத்துடன் உள்ளது.

வீரர்களை பொறுத்த வரையில் ஹர்பஜன், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் யுவராஜ் போன்றோர் அணிக்கு வலுசேர்த்துள்ளனர்.

எனவே இந்திய அணி நிச்சயம் கிண்ணத்தை கைப்பற்றும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலேயே இது நன்கு வெளிப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Related posts

டேவிட் வார்னருக்கு இந்த சீசனில் இனி வாய்ப்பில்லை

wpengine

“பங்களாதேஷ் வீரர்கள் பழைமை வாய்ந்தோர்.. எமது வீரர்களோ உபாதைக்கு உள்ளாவோர்.. – சந்திமால்

wpengine

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று

wpengine