விளையாட்டு

டில்ஷானின் “ஸ்கூப்” ஷாட்டை அசத்தலாக தட்டிய சங்கா



இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கிரிக்கெட் உடனான தொடர்பை இன்னும் நீடித்தே வருகிறார்.

தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிக் கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக ஆடி வரும் சங்கக்காரா, பட்டையை கிளப்பி வருகிறார்.

ஹாம்ஷயர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 35 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசிய சங்கக்காரா, 72 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதனால் சர்ரே அணி 20 ஓவரில் 188 ஓட்டங்கள் குவித்தது.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய ஹாம்ஷயர் அணி 16.3 ஓவரில் 108 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழக்க சர்ரே அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சங்கக்காரா, டில்ஷான் வழக்கமாக ஆடும் “ஸ்கூப்” ஷாட்டை அசத்தலாக ஆடி பவுண்டரி அடித்தார்.

Related posts

SLC T-20 லீக் போட்டிகளுக்கான 04 தலைமைகள் கொண்ட அணியினர் விபரம் வெளியீடு…

wpengine

இலங்கை அணியுடனான ஸ்கொட்லாந்து குழாம் அறிவிப்பு..

wpengine

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

wpengine